முன்னாள் உலக அழகி சுஸ்மிதா சென் அழகி பட்டத்தை பெற்று நேற்றுடன் 24 வருடம் கழிந்த நிலையில் அவர் அளித்த பேட்டியில் தனக்கு நேர்ந்த பாலியல் தீண்டல்கள் பற்றி கூறியிருந்தார் .
இந்த நிகழ்வு ஆறு மாதங்களுக்கு முன் ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்துக் கொண்ட போது நடந்ததாக சுஷ்மிதா சென் குறிப்பிட்டுள்ளார்… நான் விருது வழங்கும் விழாவிற்கு சென்றிருந்தேன்…
அப்போது திடீரென யாரோ ஒரு நபர் என் பின்னால் நின்று தகாத முறையில் என்னை தீண்டுவதை நான் உணர்ந்தேன். அந்த கூட்டத்தில் தான் சிக்க மாட்டேன் என்று நினைத்து அந்த நபர் என்னை தீண்டியிருக்க வேண்டும். அந்த நபர் என்னை தீண்டிய மறு நொடி அவனது கையை பிடித்து இழுத்து திரும்பி பார்த்த போதுதான். எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அவன் ஒரு 15 வயதுமிக்க சிறுவன். அவன் கழுத்தில் கைப்போட்டு என்னுடன் நடக்க வைத்து அழைத்து சென்றேன். ஒருவேளை நான் இப்போது நினைத்தால்… நீ செய்த தவறை அனைவர் முன்னிலும் சுட்டிக் காட்டினால். உன் வாழ்க்கை இன்றுடன் முடிந்துவிடும் என்று அறிவுரைத்தேன். ஆரம்பத்தில் அவன் தனது தவறை ஒப்புக்கொள்ளவில்லை.
ஆனால், நான் மேலும் கண்டிப்புடன் பேசிய போது… தான் செய்தது தவறு என்றும், மீண்டும் இதுபோன்ற தவறுகளில் ஈடுபட மாட்டேன், என்று தன்னிடம் கூறியதாக சுஷ்மிதா சென் குறிப்பிட்டுள்ளார்.
நான் நினைத்திருந்தால் அவன் மீது ஆக்ஷன் எடுத்திருக்க முடியும். ஆனால், அப்படி நான் செய்யவில்லை. காரணம் தான் செய்தது தவறு என்றே அவனுக்கு தெரியவில்லை. அவனுக்கு யாரும் அவன் செய்தது தவறு என்று கற்பிக்கவும் இல்லை. இதை கேளிக்கையாக செய்யக் கூடாது என்பதை யாரும் அவனுக்கு எடுத்துக் கூறவில்லை. என்று மேலும் சுஷ்மிதா சென் தான் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.