போலாந்து நாட்டில் போதை பொருள் தடுக்கும் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், அவர்களிடமிருந்த தப்பிக்க குற்றவாளி ஒருவர் நிர்வாணமாக வீட்டின் மேலே இருந்து கீழே குதித்துள்ளார்.
போலாந்தின் தலைநகரமான Warsaw பகுதியில் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் மற்றும் சுங்க அதிகாரிகள் சமீபத்தில் அங்கிருக்கும் வீடுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது Zabki-ல் இருக்கும் வீட்டில் ஆயுதமேந்திய வீரர்கள் சோதனை மேற்கொள்ள முயற்சித்துள்ளனர். அப்போது வீட்டின் கதவு அடைக்கப்பட்டிருந்ததால், கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்
உடனடியாக அந்த வீட்டில் இருந்த நபர், இவர்களிடமிருந்த தப்பிக்க வேண்டும் என்பதற்காக நிர்வாணமாக வீட்டின் முதல் மாடியிருந்து குதித்துள்ளார்
இதைக் கண்ட வீரர்கள் உடனடியாக பாரிகாட் மூலம் அந்த நபரை தடுத்து பிடித்துள்ளனர். இது தொடர்பான காட்சிகள் அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதால், அந்த வீடியோ வெளியாகியுள்ளது
இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் தெரிவிக்கையில், நிர்வாணமாக பிடிக்கப்பட்ட நபர் ஒரு குற்றவாளி எனவும், இதன் காரணமாகவே அவன் பிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
போலாந்து நாட்டில் சமீபகாலமாக போதை பொருள் வியாபாரம் தலை தூக்கி வருவதன் காரணமாக அதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், 34 வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இலங்கை மதிப்பில் 20 லட்சத்திற்கும் மேல் பணம், செல்போன்கள் மற்றும் ஆடம்பர கடிகாரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது