சீனாவில் பள்ளி மாணவி வேகமாக சென்று கொண்டிருந்த கார் சன்னலில் அமர்ந்து மேற்கூரையில் நோட் வைத்து எழுதிக்கொண்டே பயணம் செய்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி கடந்த வாரம் டேக்சி மீது அமர்ந்து படித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாணவி காரின் ஜன்னல் மீது அமர்ந்து மேற்கூரையில் நோட் வைத்து எழுதிக்கொண்டிருந்தார். இதனை பின்னால் வந்த காரில் இருந்த நபர் வீடியோ எடுத்து இணையதளங்களில் பதிவேற்றம் செய்தார்.
வேகமாக செல்லும் காருக்கு வெளியே அமர்ந்து மாணவி பயணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காருக்கு அருகில் பேருந்து மற்றும் பல வாகனங்கள் வந்த போதும் மாணவி அமர்ந்திருந்தார்.
இதனை கண்ட காரை ஓட்டிய மாணவியின் தந்தை அவரை உள்ளே இழுத்தார். ஆனால் மாணவியை கவனிக்காமல் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக அவரின் ஓட்டுநர் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது.