நடு ராத்திரியில் பல்கலைக்கழக இணையத்தளத்தை முடக்கி காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொன்ன பலே கில்லாடிக் காதலன்!!

புதுடில்லியில் இயங்கி வரும் ஜமியா மில்லியா இஸ்லாமியர் பல்கலைகழகம் 1920 இல் பிரிட்டிஷ் ஆட்சியின் போது இது நிறுவப்பட்டது. இதில் உள்நாடு மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் இருந்தும் மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் திங்கட்கிழமை இரவு சுமார் 12 மணியளவில் இந்த பல்கலைகழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் திடீரென முடக்கப்பட்டுள்ளதோடு, தளத்தின் முகப்பு பக்கத்தில் ‘ஹேப்பி பர்த்டே பூஜா’ என பிறந்த நாள் வாழ்த்துகள் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் குறித்து பல்கலைகழகம் இதுவரை எந்த வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. மேலும் இணையத்தளத்தை முடக்கியது யார் என்பதும் குறித்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது சமூக வளைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பல இளைஞர்களும், இளம்பெண்களும் பூஜாவிற்கு வாழ்த்து தெரிவித்து பல்வேறு விதமான கமெண்டுகளை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து பல்கலைகழகம் இதுவரை எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை. மேலும் இணையதளத்தை முடக்கியது யார் என்பதும் குறித்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது சமூக வளைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பல இளைஞர்களும், இளம்பெண்களும் பூஜாவிற்கு வாழ்த்து தெரிவித்து பல்வேறு விதமான கமெண்டுகளை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் கணக்கெடுப்பின் படி 2016 ம் ஆண்டு மட்டும் மொத்தம் 199 அரசு வலைத் தளங்கள் இந்தியாவில் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.