35 பயணிகளின் உயிரை காப்பாற்றிவிட்டு உயிர் விட்ட பேருந்து சாரதி ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.நேற்றைய தினம் அனுராதபுரத்தில் இருந்து கண்டி வரை பயணித்த சொகுசு பேருந்து ஒன்றின் சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.மஹவெல – கவுடுபெலெல்ல பிரதேசத்தில் வைத்து குறித்த சாரதிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளதுபின்னர் அந்த சாரதி போராடி பேருந்தை ஓரமாக நிறுத்தியமையினால் ஏற்படவிருந்த பாரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேருந்தை நிறுத்தியிருக்க முடியாமல் போயிருந்தால் பேருந்து பாரிய பள்ளத்தில் விழுந்திருப்பதற்கான வாய்ப்புகள் இருந்ததாக தெரியவந்துள்ளது.எனினும், பேருந்தின் சாரதியை வைத்தியசாலையில் அனுமதிக்க பயணிகள் நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் அவர் உயிரிழந்துள்ளார்.
அனுராதபுரம் – சாலியபுர பிரதேசத்தை சேர்ந்த 55 வயதான சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.