சிறிய கூண்டு ஒன்றில் அடைக்கப்பட்டிருந்த 86 வயதான தாய்!

கொழும்பு புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ கல்வலபார பகுதியில் சிறிய கூண்டு ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 86 வயதான தாய் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் குறித்த தாயை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு பிள்ளைகளின் தாயான இவர், 4 அடி அகலமும், 5 அடி நீளமுமான பலகை மற்றும் சீமெந்து கற்கலினால் அமைக்கப்பட்ட சிறிய கூடொன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாயின் மகளொருவர் தங்கியிருந்த வீட்டுக்கு வெளியிலேயே இந்த தாய் அடைத்து வைக்கப்பட்டிருந்த கூடு இருந்துள்ளது. பாதுகாப்பு காரணமாக இவ்வாறு தாயை தனிமைப்படுத்தி வைத்ததாக அவரது மகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பொலிஸாரினால் மீட்கப்பட்ட தாய் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது மகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.