இப்படிபட்ட வீடுகளில் வாழ யாருக்கு தான் ஆசை இருக்காது?

அனைவருக்கும் அவரவர் கர்பனைக்கு ஏற்ப கனவு இல்லத்தை கட்டி வாழ வேண்டும் என்ற ஆசை கட்டாயம் இருக்கும். ஆனால் அதற்கு போதுமான பணம் இல்லாமையோ அல்லது அவர்களது கனவுகளை நிறைவேற்றுவதற்கு ஏற்ற இடமாக இருப்பதில்லை.

இங்கு உலகில் உள்ள மிக சிறிய வீடுகள் தொகுத்துள்ளோம். இதனை பார்த்தால் கண்டிப்பாக அனைவருக்கும் அங்கு ஒரு நாளவது வாழ்ந்துவிட வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக வரும்.

The Broons’ House, Scotland

ஸ்காட்லாண்டில் Lairg கிராமத்தில் இருக்கும் Loch Shin என்ற இடத்தில் தான் இந்த மர்மமான கட்டிடம் உள்ளது. 2015 ஆம் ஆண்டு புயலின் பின்னர் சேதமைடந்த இந்த Broons’ House உள்ளூர் மக்கள் பணம் சேகரித்து சீரமைத்துள்ளனர். இந்த வீட்டில் விசித்திரமான விஷயங்கள் எல்லாம் இங்கு நடக்குமாம்.

A fridge-house

நவீன காலத்தில் வீடுகளில் மிகவும் சிறியதாகிவிட்டதோடு, அறைகளில் நாம் வசிப்பதே சீரமமாக இருக்கும், இதில் அன்றாட அத்தியாவசிய பொருட்களுக்கு என்று தனி ஸ்டோர் ரூம் எல்லாம் அமைக்க முடியவில்லை என்பதால் இப்படி ஒரு ஐடியா..

கோள வடிவில் அமைக்கபட்டிருக்கும் இது ஒரு Groundfridge. இது உணவு பொருட்களுக்கு நிலையான வெப்பநிலை வழங்கும். இந்த இடத்தில் காய்கறி மற்றும் உணவு மது போன்றவற்றை சேமிப்பிற்காக பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் இந்த வீடு மழைகளுக்கு கூட தங்கும் வகையில் அமைந்துள்ளது.

The smallest house, the Czech Republic

உலகின் மிக சிறிய வீடுகளில் ஒன்று Pragueல் அமைந்துள்ளது. இந்த வீடு 2.25 மீட்டர் அகலம் மட்டுமே உள்ளது. இது 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் 2 சாதாரண வீடுகளுக்கு இடையில் கட்டப்பட்டது.

The Thousand Islands House, the USA and Canada

அமெரிக்கா மற்றும் கனடா எல்லையில் தீவுப்பகுதியில் மொத்தம் 1,864 தீவுகள் உள்ளன. இதில் மிகப் பெரிய தீவுகளில் சுமார் 1,500 பேர் உள்ளனர். இங்கு உள்ள ஒரு தீவில் ஒரே வீடு மட்டும் தான் உள்ளது என்று கூறினால் நம்பமுடிகிறதா?

Steve Areen’s house, Thailand

இந்த வீடு உலகில் உள்ள பல ஆக்கப்பூர்வமான மக்களை கவர்ந்துள்ளது. இந்த வீடு ஒரு மாங்காய் தோப்பில் கட்டபட்டுள்ளது. முற்றிலும் ஆர்கானிக் முறையில் அமைக்கபட்ட இந்த வீடு களிமண் செங்கல்களால் கட்டப்பட்டது. வீட்டில் உட்புற வேலை பாடுகளுக்கு மட்டும் $ 9,000 செலவு செய்துள்ளனர்.

One-square-meter house

உலகின் மிகச் சிறிய வீடு Van Bo Le-Mentzel என்ற கட்டிடகலை வல்லுனர் வடிவமைத்துள்ளார். அதன் பரப்பளவு 1 சதுர மீட்டர் மட்டுமே இருந்தாலும், வீட்டிற்கு ஒரு கதவு, ஜன்னல், ஒரு நாற்காலி உள்ளது. இந்த சிறிய வீடு 40.8 கிலோ எடையும், சக்கரங்களையும் கொண்டுள்ளது.

Snowboarders’ eco-houses

Mike Basich இவர் ஒரு சிறந்த snowboarde வீரர் ஆவார். ஒரு ஆடம்பர மாளிகையாக காணப்படும் இந்த வீடு மலைகளின் நடுவில் (23 சதுர மீட்டர்) தேர்ந்தெடுத்து கட்டியுள்ளார். இந்த உன்னதமான கட்டிடத்தை உருவாக்க அவர் சுற்றுச்சூழல் உள்ள இயற்கை பொருட்களை மட்டுமே பயன்படுத்தினார், மேலும் வெப்பம் மற்றும் ஒளியை எடுக்க solay cellகளை அமைத்துள்ளார்.

இதே போல் பயனிக்கும் வீடு ஒன்றையும் அவரின் நண்பர் உதவியோடு கட்டியுள்ளார்.

Foldable houses, the Netherlands

இந்த தனித்துவமான சிறு வீடுகளை Heijmans கட்டினார். இந்த வீடுகள் ஒரு சமையலறை, ஒரு ஹால், ஒரு படுக்கையறை உள்ளது. இதற்கும் மேல் இந்த வீடுகளுடன் பர்னிச்சர்களும் உள்ளது.

A hotel in a Boeing, Costa Rica

1965 பழுதான ஒரு விமானத்தை வாங்கி அதனை ஒரு ஓட்டலாக வடிவமைத்துள்ளனர். கோஸ்ட்டா ரிக்காவின் வணிகர்கள் இந்த விமானத்தை வாங்கி, ஏஜெர் குளம் அருகே வைத்து, வடிவமைப்பாளர்களை கொண்டு ஒரு ஹோட்டலை உருவாக்கினர்.

The Exbury Egg

Stephen Turner என்ற கட்டிட வடிவமைப்பாளர், முட்டை போன்ற வீட்டினை கட்டியுள்ளார். இதன் நீளம் 6 மீட்டர் அகளம் 2.8 மீட்டர் ஆகும். தண்ணீருக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த வீட்டில் இருந்த படியே இயற்கை சூழலை ரசிக்க உதவும்.

The Pier House, Great Britain

conwyல் அமைந்துள்ள இந்த வீடு, கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அதன் பரப்பளவு 5.49 சதுர மீட்டர் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து 1900 வரை மக்கள் அங்கு வாழ்ந்து வந்தனர். Robert Jones என்ற மீனவர் தான் இறுதியாக அந்த வீட்டில் வாழ்ந்துள்ளார். இந்த வீட்டின் மேற்கூரை மிகவும் சிறியதாக இருந்ததால் அவரும் அந்த வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

WALKING HOUSE

2 கம்பெனிகள் இணைந்து இந்த வீட்டினை வடிமைத்துள்ளது. வீட்டின் அளவு 3.72×3.5×3.5மீட்டர் 1,200 கீலோ எடை ஆகும். இதன் அதிகபட்ச வேகம் 37 mph ஆகும்.