இலக்கிய உலகில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிலிப் ரோத் மரணம்!!!

இருபதாம்  நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்க இலக்கிய உலகில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிலிப் ரோத் இதய செயலிழப்பு காரணமாக தனது 85ஆவது வயதில் நியூயோர்க் வைத்தியசாலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

அமெரிக்க இலக்கிய உலகில் தனக்கென நிலையான இடத்தை பெற்ற பிலிப் ரோத்தின்   1959ஆம் ஆண்டில் வெளிவந்த ‘குட்பை கொலம்பஸ்’ என்ற சிறுகதை தொகுப்பு மிகுந்த வரவேற்பை பெற்றது. பின்னர் அவர் எழுதிய பாலியல் அடிப்படையிலான ‘போர்ட்னாய்ஸ் கம்ப்ளெயிண்ட்’ அவரை பொது மக்களிடம்  கொண்டு  சேர்த்தது.

அதன் பின்னர் அவர் ஏராளமான சரித்திர நாவல்கள் எழுதினார். குறிப்பாக ‘அமெரிக்கன் பாஸ்டரல்’ என்ற நாவல் அவருக்கு பெரும் புகழை சேர்த்தது. அத்துடன் புலிட்சர் விருதையும் பெற்றுத்தந்தது.

அமெரிக்காவில் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது 2011ஆம் ஆண்டு பிலிப் ரோத்துக்கு வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் தேசிய மனிதாபிமான பதக்கம் வழங்கி சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.