தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கலவரம் மேலும் தீவிரமடையாமல் இருக்க 3 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இணையச் சேவையினை தடைசெய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று முதல் பெருமளவில் மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதள் போது பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர். அத்தோடு பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வன்முறை மேலும் பரவாமல் இருக்கவும், வதந்திகள் பரவாமல் தடுக்கவும் தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இணையச் சேவையினை தடைசெய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.