பதில் பிரதம நீதியரசர் நியமனம்!

பதில் பிரதம நீதியரசராக, உயர்நீதிமன்ற நீதியரசர் ஈவா வனசுந்தர, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் வைத்து, அவருக்கான நியமனக் கடிதம், நேற்று (23) வழங்கப்பட்டது. இதன்போது, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவும் பங்கேற்றிருந்தார்.