அணுவாயுத மோதல் குறித்து வடகொரியா எச்சரிக்கை!

அமெரிக்க வடகொரிய தலைவர்கள் மத்தியிலான சந்திப்பு இடம்பெறுமா என்பது குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள வடகொரியா அணுவாயுத மோதல் குறித்து அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உச்சி மாநாட்டின் தலைவிதி முற்றாக அமெரிக்காவின் கைகளிலேயே உள்ளது என தெரிவித்துள்ள வடகொரியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் சூ சொன் குய்  பேச்சுவார்த்தைகள் இரத்தானால் இரு நாடுகளும் அணுவாயுத மோதலில் ஈடுபடவேண்டிவரலாம் எனவும் எச்சரித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகளில் மேசைகளில் சந்திப்பதா அல்லது எங்களுடன் அணுவாயுத மோதலை எதிர்கொள்வதா என்பது அமெரிக்காவின் கரங்களிலேயே உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு வருமாறு அமெரிக்காவிடம் கெஞ்சமாட்டோம் எனவும் வடகொரிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வடகொரிய ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன என  டிரம்ப் தெரிவித்துள்ள நிலையிலேயே வடகொரியா அமைச்சர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.