சிறிலங்காவில் இராணுவத் தளத்தை அமைக்கவில்லை – சீனா

அம்பாந்தோட்டையில் துறைமுக அபிவிருத்தி மற்றும் கைத்தொழில் வலயம் என்ற பெயரில், சீனா இராணுவத் தளத்தை அமைத்து வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை சீனத் தூதுவர் செங் ஷியுவான் நிராகரித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றின் பின்னர் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,

“சிறிலங்காவில் சீனாவின் திட்டங்கள் தொடர்பாக பெருமளவில் ஊகங்கள் வெளியாகின்றன. ஆனால் அவற்றில் உண்மையில்லை.

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்புத் தொடர்பான விவகாரங்கள் அனைத்தும், உள்ளூர் அதிகாரிகளினாலேயே கையாளப்படும் என்று உடன்பாடு செய்து கொள்ளப்பட்டிருக்கிறது.

இது ஒரு கூட்டு முயற்சி. சிறிலங்கா துறைமுக அதிகாரசபைக்கு 30 வீத பங்குகள் உள்ளன.

இது ஒன்றும் சீனாவின் தனிப்பட்ட முதலீட்டு வலயம் அல்ல. ஏனைய நாடுகளும் முதலீடு செய்ய முடியும்.

நான் கூறுவதை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், இராணுவத் தளபதிகளும் உறுதிப்படுத்துவார்கள்.” என்றும் அவர் கூறியுள்ளார்.