யாழில் இரத்தம் சொட்டச் சொட்ட பொலிஸ் நிலையம் சென்ற இளைஞன்!!

யாழ்.கரவெட்டி பகுதியில் குடும்ப தகராறு வாள்வெட்டில் முடித்ததில் இளைஞர் ஒரு வர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்றய தினம் இரவு கரவெட்டி பகுதியல் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் 30 வய தான இளைஞர் ஒருவரே படுகாயமடைந் துள்ளார்.

இரு இளைஞர்களுக்கிடையே இடம்பெற்ற குடும்பத் தகராறே இறுதியில் கத்திவெட்டில் முடிந்ததாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் தலை, தோள்மூட்டு உள்ளிட்ட உடல் பகுதிகளில் இரத்தம் வடிய வடிய நெல்லியடிப் பொலிஸ் நிலையம் வருகை தந்தார்.

அவரைப் பின் தொடர்ந்து குறித்த இளைஞரைக் கத்தியால் வெட்டிய இளைஞனும் கத்தியுடன் பொலிஸ் நிலையம் வந்து சரணடைந்தார்.

இதன் போது வெட்டுக் காயங்களுக்குள்ளான இளைஞன் வாளால் தான் வெட்டப்பட்டதாகப் பொலிஸாருக்குத் தெரிவித்தார்.

ஆனால், வெட்டிய இளைஞனோ கத்தியைக் காட்டி நான் கத்தியால் தான் வெட்டினேன் என்பதில் உறுதியாக நின்றார். இதனால், பொலிஸ் நிலையத்தில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து கத்தியுடன் பொலிஸ் நிலையம் வந்த இளைஞன் பொலிஸார் கைது செய்து விசாரணைகள் மேற்கொண்டனர்.

படுகாயமடைந்த இளைஞர் மந்திகை ஆதார வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டார்.