யாழ்ப்பாணம் – தெல்லிப்பளையில் ஆசிரியரொருவர் இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெல்லிப்பளையில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 7இல் கல்வி கற்கும் 12வயது மாணவிகள் ஏழு பேரை பாலியல் பலாத்காரம் செய்த சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் பல சந்தர்ப்பங்களில் குறித்த 7 மாணவிகளையும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் இது தொடர்பில் எவருக்கும் தெரிவிக்கக் கூடாது என குறித்த மாணவிகளை அச்சுறுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவியொருவர் அவரின் பெற்றோருக்கு அறிவித்துள்ளார்.
மாணவியின் பெற்றோர் ஆசிரியருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சந்தேகநபரான ஆசிரியர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், யாழ். நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.