யாழ்ப்பாணத்தில் வயோதிப தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் உரும்பிராய் வடக்குப் பகுதியில் நேற்று நடந்துள்ளது.
வெளிநாட்டிலுள்ள தனது பிள்ளைகளை நீண்ட நாட்களாக பார்க்க முடியவில்லை என்ற மனவிரக்தியில் அவர் விபரீத முடிவை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் நான்கு பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், குறித்த வயோதிபத் தாய் தனிமையில் வாழ்ந்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றுப் பிற்பகல் அவரது உறவினரொருவர் வீடு சென்று பார்த்த போது அவரை வீட்டில் காணவில்லை. இறுதியாக வீட்டுக் கிணற்றை எட்டிப் பார்த்த போது அங்கு வயோதிபத் தாய் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சடலம் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.