கொழும்பு கடலில் ஏற்பட்ட அதிசயம்!

தலைநகர் கொழும்பில் புதிய கடற்கரை ஒன்று உருவாகியுள்ளதால் மக்கள் நன்மை அடைவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகரம் நிர்மாணிக்கப்பட்டு வரும் நிலையில், அந்தப் பகுதியில் புதிதாக 2 கிலோ மீற்றர் நீளமான கடற்கரை ஒன்று உருவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த திட்டத்தை செயற்படுத்தும் CHEC நிறுவன அதிகாரி லியென்க் தோவ் மிங்க் இதனை தெரிவித்துள்ளார்.

இதுவரை கொழும்பு நகரத்திற்கு கடற்கரை ஒன்று இல்லை எனவும், துறைமுக நகர திட்டத்தின் ஊடாக மக்கள் பாரிய நன்மையை அடைவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள சீன தூதுவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செயற்றிட்டம் தொடர்பான செயலமர்வில் அவர் கருத்து வெளியிட்டார்.

துறைமுக நகரத்திற்கான மற்றொரு சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

துறைமுக நகர திட்டம் ஊடக இலங்கைக்கு 1.4 பில்லியன் டொலர் நேரடி வெளிநாட்டு முதலீடு கிடைக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடலுக்குள் புதிய நகரம் உருவாகி வருகின்றது. இந்நிலையில் ஆழ்கடலிற்குள் கடற்கரை உருவாகும் அதிசயம் கொழும்பில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.