கோர விபத்து!! கன்ரர் வாகனம் மோதி ஒருவர் பலி!!

யாழ்ப்பாணம், கோப்பாய் சந்தியில் கன்ரர் ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது. அதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து இன்று காலை நடந்துள்ளது. முதியவர் படுகாயமடைந்த கோப்பாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்தவர் 62 வயதுடையவர் என்றும், கோண்டாவிலைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.