கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று (24) அபயபுர சந்தியில் உள்ள வீதியை மறைத்து இடம்பெற்று வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறியுள்ளார்.
திருகோணமலை அனுராத சந்தியில் இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டம் நடை பவணியாக தலைமையக பொலிஸ் நிலையத்திற்குச் சென்று மீண்டும் அபயபுர முற் சந்தியை வந்தடைந்தடைந்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தங்களுடைய அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தருவதாக பல தடவைகள் தெரியப்படுத்தியும், எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.