இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் தென்னிலங்கை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொழும்பை சூழவுள்ள சில பகுதிகள் நீரில் மூழ்கும் அபாய நிலையில் உள்ளதாக மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.தொடர்ந்து மழை பெய்தால் இலங்கை நாடாளுமன்றம் உள்ளிட்ட பகுதிகள் நீரில் மூழ்கும் அபாய நிலையை எட்டியுள்ளன.
ஆபத்தான நிலை குறித்து சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அறிவித்துள்ளதாகவும், தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பகுதிக்கு மாத்திரமின்றி அருகில் உள்ள வீடுகளுக்கும் இந்த ஆபத்து உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற கட்டடத்தை சுற்றி அமைந்துள்ள தியவன்னா ஓயவின் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதாகவும், தொடர்ந்து சில மணித்தியாலங்கள் மழை பெய்தால் நாடாளுமன்றம் நீரில் மூழ்கும் ஆபத்து உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஆபத்த நிலை ஏற்படும் பட்சத்தில் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க கடற்படையினர் தயாராக உள்ளனர்.
நீர்நிலைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையால் பாரிய முதலைகள் வெளியில் வரும் அபாயம் உள்ளதாக நாடாளுமன்ற அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்