-
மேஷம்
மேஷம்: எதிர்பாராத பண வரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துகொள்வீர்கள். எதிர்பார்த்த இடத்தி
லிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும். கனவு நனவாகும் நாள். -
மிதுனம்
மிதுனம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய் வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்று கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
-
கடகம்
கடகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். சொத்து பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் இதமாகப் பேசி வேலை வாங்குவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.
-
சிம்மம்
சிம்மம்: சாதுர்யமாக பேசி எல்லோரையும் கவருவீர்கள். தோற்றப் பொலிவுக் கூடும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.
-
கன்னி
கன்னி: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.
-
துலாம்
துலாம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை கறாராக வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். இனிமையான நாள்.
-
தனுசு
தனுசு: தவறு செய்பவர்களை தட்டி கேட்பீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக பேசத் தொடங்குவார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
-
மகரம்
மகரம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
-
கும்பம்
கும்பம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்
தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள். -
மீனம்
மீனம்: எதையும் தன்னம்பிக்கையுடன் செய்ய தொடங்குவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் புது முயற்சிகள் மேற்கொள்வீர்கள். திட்டங்கள் நிறைவேறும் நாள்.