மாவாவுடன் இரு வேறு இடங்களில் இருவர் கைது செய்யப்பட்டனர்.திருநெல்வேலிப் பகுதியில் ஒருவரும், நாவாந்துறையில் வைத்து இன்னுமொருவரும் கைது செய்யப்பட்டனர்.சந்தேகநபர்களிடமிருந்து, 4 கிலோ கிராம் மாவா கைப்பற்றப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.பாடசாலை மாணவர்களுக்கு மாவா விற்பனை செய்த குற்றச்சாட்டில் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.இந்த சம்பவத்தை அடுத்து, போதைப்பொருள் விற்பனை விற்பனை செய்வோரைக் கைது செய்ய நியமிக்கப்பட்ட 30 பேர் கொண்ட பொலிஸ் குழுவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.