சொந்த வீட்டிலேயே திருடிய சிறுவனுக்கு தாய் கொடுத்த கொடூரமான தண்டனை …!!

சிறுவர்களை அவர்கள் செய்த தவறுக்கு பெற்றோர்கள் கண்டிப்பது, தண்டனை தருவது எல்லாம் சாதாரணமான ஒன்று தான். ஆனால், சிலர் மிகவும் கொடூரமாக தண்டனையாக கொடுப்பது அந்த குழந்தையின் மனநிலை மாற வாய்ப்பு உள்ளது. மேலும், அப்படி அளிக்கும் தண்டனையை சிலர் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுவிடுகின்றனர். அது சமூக வலைத்தளங்களில் வைராகி விடுகின்றது.சீனாவை அடுத்த கவுண்டி பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன் தனது வீட்டில் இருந்த ரூ. 20 ஆயிரம் பணத்தை திருடியுள்ளான். அப்போது அதை பார்த்த தாய் ஏன் திருடினாய் என கேட்ட போது சிறுவன் காரணத்தை சொல்ல மறுத்துள்ளான்.

இதனால், ஆத்திரமடைந்த தாய் தனது மகனை மோட்டார் சைக்கிளின் பின்னால் ஒரு கயிற்றில் கற்றி ரோட்டில் இழுத்து சென்றுள்ளார். ரோட்டில் தேய்ந்த படியே சென்ற சிறுவன் வலி தாங்க முடியாமல் கதறி அழுதுள்ளான்.

அப்போது இதை ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். பின்னர் அது இணையத் தளத்தில் வைரலாக பரவியது.அதைத் தொடர்ந்து போலீசார் சிறுவனின் தாயாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த தாய் இது என் கணவனின் ஒரு மாத சம்பளத்திற்கு சமமானது. பணம் திருடியதை குறித்து பதில் கூறாத தனது மகனை, இன்னும் 2 அல்லது 3 நாட்கள் இது போன்று செய்யப் போகிறேன் என அதிர்ச்சித் தகவலை கூறியுள்ளார்.

இனிமேல், அதுபோன்று செய்யக்கூடாது. வார்த்தைகளால் மிரட்டினால் போதும் என, அவருக்கு அறிவுரை கூறி பொலிசார் அனுப்பி வைத்துள்ளனர் .