மாணவியுடன் தகாத முறையில் நடக்க முயற்சித்த ஆசிரியர்!

கிளிநொச்சி பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் மாணவி ஒருவர் மீது ஆசிரியர் ஒருவர் தகாதமுறையில் நடக்க முற்பட்டமை தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவியால் அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கரைச்சி கல்வி கோட்டத்திற்குட்பட்ட பாரதிபுரம் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவியொருவரை அப்பாடசாலையில் கற்பித்தலில் ஈடுபட்டு வரும் ஆசிரியர் ஒருவர் நேற்று பாடசாலை நேரத்தில் தகாத முறையில் முற்பட்டதாக பாதிக்கப்படட மாணவியால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று பாடசாலைக்குச்சென்ற மாணவி குறித்த ஆசிரியரின் பாடத்திற்கு செல்லவில்லை. இச்சம்பவம் தொடர்பில் வகுப்பாசிரியரிடமும் அவரது பெற்றோரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தன்னிடம் வழங்கப்பட்ட குறித்த முறைப்பாடு தொடர்பில் பெற்றோர் பாதிக்கப்பட்ட மாணவி, மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணைகளை மேற்கொண்டு சம்பவம் தொடர்பில் வலயக் கல்விப்பணிப்பாளருக்கு தெரிவித்திருப்பதாகவும் அதிபர் தெரிவித்துள்ளார்.