தமிழ்நாடு தூத்துக்குடியில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வந்தன.
அந்தப் பகுதியில் அமைக்கப்படும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை அகற்றுமாறு அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் அது வன்முறையாக வெடித்திருந்தது.
இதில் 12 பொதுமக்கள் பொலிஸாரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இதன் காரணமாக தமிழகம் எங்கும் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது சிறுவன் ஒருவர் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை எதிராக போராடும் காணொளி வெளியாகி உள்ளது.
பல மக்கள் மத்தியில் முன்னிலை வீரமாக முழங்கும் சிறுவனின் துணிச்சலை கண்டு பலரும் வியந்து வருகின்றனர்.