பிரித்தானியா இளவரசர் ஹரியின் திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்று 5 வயது சிறுமி கதறி அழுதது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
இளவரசர் ஹரி-மெர்க்கல் திருமணம் கடந்த 19-ஆம் திகதி வின்ஸ்டரில் உள்ள தேவாலயத்தில் கோலகலமாக நடைபெற்று முடிந்தது.
திருமணத்திற்கு முன்னர் தான் இவர்கள் பற்றி தகவல்கள் வந்த நிலையில், திருமணத்திற்கு பின்னரும் அவர்களின் ஒவ்வொரு அசைவுகளையும் உள்ளூர் ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில் Lola என்ற 5 வயது சிறுமி தனது அம்மாவான Ashlee Brown-விடம் நாம் ஏன் இளவரசர் ஹரி திருமணத்திற்கு செல்லவில்லை என்று அழுது கொண்டே கேட்கிறார்.
அதற்கு அவர் நமக்கு திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை, அதன் காரணமாக நாம் செல்ல முடியாது என்று கூற உடனே அந்த சிறுமி கதறி அழுகிறார்.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.