ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நீக்கி, புதிய தலைவரை நியமிக்கும் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
ரணிலை தலைமையிலிருந்து நீக்குவதற்கான புதிய முயற்சியாக திஸ்ஸமஹாராமயவிலிருந்து, ஐ.தே.க. தலைமையகம் அமைந்துள்ள சிறிகொத்த வரையான எதிர்ப்பு பேரணியொன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை தென் மாகாண சபை உறுப்பினர் டி.வி.கே.காமினி ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் இரு வாரங்களுக்குள் கட்சியின் ஏராளமான ஆதரவாளர்களுடன் எதிர்ப்பு பேரணி இடம்பெறும் என்றும் குறிப்பிட்டார்.
தென்மாகாண உறுப்பினர்கள் மாத்திரமன்றி, ஏனைய மாகாண சபைகளின் பெரும்பாலான ஐ.தே.க. உறுப்பினர்களும் இதில் பங்குபற்றுவார் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.