இளம் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்!

கண்டியில் இளம் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

தவுலகல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹலாதிவல பிரதேசத்தில் மனைவியை கத்தியால் குத்தி கணவன் கொலை செய்துள்ளார்.

ஹேவாவிஸ்ஸ விதானாரச்சிகே பீரித்திகா யமுனா என்ற 34 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

கத்தியால் குத்தி மனைவியை கொலை செய்த பின்னர் கணவர் இரத்தம் தோய்ந்த கத்தியுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 3 ஆண் பிள்ளைகள் பிள்ளைகள் உள்ள நிலையில், இரண்டு பிள்ளைகளின் முன்னால் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இரண்டாவது மகனை பாடசாலையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்த சந்தர்ப்பத்தில் வீட்டில் இருந்த 44 வயதுடைய கணவருடன் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

வாய்த்தகராறு முற்றியமையினால் கணவர் கட்டில் மீது இருந்த கத்தியை எடுத்து தலையில் குத்தியுள்ளார். பின்னர் இரத்தம் வடிந்த நிலையில் கத்தியுடன் சென்று பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.