மட்டக்களப்பில் தீவினை விற்ற தமிழர்கள்? வாங்கியவர் யார் தெரியுமா?

மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட ஊரியான்கட்டு சேத்துக்குடா தீவு பகுதியை அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு தமிழர்கள் விற்றுள்ளனர்.

மட்டக்களப்பு, வாகரை பிரதேசத்திற்கே தனி அழகு சேர்க்கும் குறித்த தீவு பகுதி பரம்பரை பரம்பரையாக இரு தமிழர் குடும்பத்திற்கு உரித்துடையாதாக காணப்படுகின்றது.

இந்நிலையில், அண்மையில் குறித்த தீவுப்பகுதியினை மட்டக்களப்பு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முஸ்லிம் பிரதி அமைச்சருக்கு விற்றுள்ளனர்.

குறித்த இரண்டு தமிழ் குடும்பத்தின் சந்ததி வழி பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளால் இவ்வாறு இந்த தீவு விற்கப்பட்டுள்ளது.

சுமார் 25 ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதி இவ்வாறு முஸ்லிம் பிரதி அமைச்சருக்கு விற்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தகவல் அறிந்த பிரதேச மக்கள் வாகரை பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

அத்துடன், இவ்வாறு குறித்த தீவு விற்கப்பட்டுள்ளமை தொடர்பில் அப்பகுதி மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன் கடுமையான எதிர்ப்பினையும் வெளியிட்டு வருகின்றனர்.