உங்கள் பல்லில் சீமைச் சுண்ணாம்பு(டார்ட்டர்) போன்ற பொருள் படர்ந்திருக்கும்.
இது உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளின் இடையே உணவுப்பொருள்கள் சிக்கிக் கொள்வதன் தொடர்ச்சியாக உருவாகிறது.
அது கனிம உப்புகள் மற்றும் கழிவுப்பொருள்களால் உருவாகிறது. இதன் விளைவாக, இயற்கையில் வெண்மையான உங்கள் பற்களின் மேற்பரப்பு மஞ்சள் புள்ளிகளுடன் தோன்ற ஆரம்பித்து மஞ்சள் படலத்தை உருவாக்கி விடுகின்றது.
இயற்கைப் பொருட்களின் உதவியோடு கறைகளை நீக்கி ஆரோக்கியமான பற்களைப் பெறலாம்.
கறைகள் இயற்கை முறையில் அகற்றுவதில் இந்த வீட்டு வைத்தியம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வழிமுறை 1
தேவையான பொருட்கள்:
1 கப் தண்ணீர்
1/2 கப் பேக்கிங் சோடா
அலோ வேரா ஜெல் 1 தேக்கரண்டி
எலுமிச்சை 10 துளிகள்
காய்கறி கிளிசரின் 4 தேக்கரண்டி
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.
இதில் அலோ வேரா ஜெல் மற்றும் எலுமிச்சையை சேர்க்கவும்.
இறுதியாக, கிளிசரின் சேர்க்கவும்.
ஒரு மென்மையான பேஸ்ட் கிடைக்கும் வரை அதை குலுக்கி, பின்னர் ஒரு மூடியுள்ள கண்ணாடி பாத்திரத்தில் சேமித்து வையுங்கள்.
உங்கள் பற்களைத் துலக்குவதற்கு இதை பற்பசையைப் போல பயன்படுத்தினால் நாளடைவில் பயன் பெறலாம்.
வழிமுறை 2
தேவையான பொருட்கள்:
தேங்காய் எண்ணெய் 1/2 கப்
சமையல் சோடா 3 தேக்கரண்டி
2 தேக்கரண்டி ஸ்டெவியாத்(Stevia) தூள்
எலுமிச்சை 20 சொட்டு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய், பேக்கிங் சோடா, மற்றும் ஸ்டீவியா ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும்.
அதை நன்கு கலந்து பிறகு, எலுமிச்சையை சேர்க்கவும்.
ஒரு மென்மையான பேஸ்ட் கிடைக்கும் வரை நன்கு கலந்து பிறகு கண்ணாடி ஜாரில் இந்தப் பேஸ்டை சேமித்து வைக்கவும்.
நீங்கள் வழக்கமான பற்பசைக்குப் பதிலாக ஒவ்வொரு நாளும் இதைப் பயன்படுத்தலாம்.