என் மகன் என்னுடன் வெளிய வரவே பயப்படுகிறார் – நடிகை ரோகினி

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் சிறுது வயதில் இருந்தே நடித்து வருபவர் ரோகினி. சுமார் 40 வருடங்களாக திரையுலகில் இருந்து வரும் நடிகைகளில் ஒருவராவார்.

raguvaran

இவர் தமிழ் சினிமாவின் தனித்துவமான நடிகரான ரகுவரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 19 வயதில் ரிஷி என்ற மகன் ஒருவனும் இருந்து வருகிறார். சமீபத்தில் இவருடைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி இருந்தது.

நடிகை ரோகினி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது தன்னுடைய கணவர் ரகுவரனை பற்றியும் பேசியுள்ளார். ரகுவரன் இறந்து விட்ட போது தன்னுடைய மகனை பள்ளியில் இருந்து அழைத்து வருகிறேன்.

அப்போது தயவு செய்து பத்திரிக்கையாளர்கள் யாரும் உள்ளே இருக்க வேண்டாம் என கூறியிருந்தேன். நான் வரும் போது யாரும் இல்லை. ஆனால் நான் வந்தவுடன் அணைத்து பத்திரிக்கையாளர்களும் என்னுடனே வந்து விட்டார்கள். இது மிகவும் தவறான ஒன்று.

எங்களுக்கெனவும் கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும். Privacy இருக்க வேண்டும். இது போன்ற தர்ம சங்கடமான சூழல் வேறு யாருக்கும் நடக்க கூடாது. இந்த சம்பவத்திற்கு பிறகு நான் நீண்ட காலம் பத்திரிக்கையாளர்களை சந்திக்காமல் இருந்து வந்தேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இது போன்ற சம்பவங்களால் என் மகன் என்னுடன் வெளிய வரவே பயப்படுகிறார். உன்னுடன் வந்தால் என்னையும் அடையாளம் கண்டு கொண்டு போகும் இடமெல்லாம் தொந்தரவு செய்வார்கள் எனக்கு இதெல்லாம் வேண்டாம் எனவும் கூறுவதாகவும் கூறியுள்ளார்.