தமிழ் சினிமாவில் துணை நடிகர், வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் சௌந்தராஜா. சுந்தர பாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், தெறி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
இவருக்கும் தமன்னா என்ற பெண்ணுக்கும் இன்று நிச்சயித்த படி திருமணம் நடந்து முடிந்துள்ளது. திரையுலக பிரபலங்கள் பலர் இவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர்.
இதனையடுத்து இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. என்னதான் திருமண பிஸியில் இருந்தாலும் சௌந்தராஜா ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து தன்னுடைய கண்டனத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.