ஹாலிவுட் பிரபலங்களான ஏஞ்சலினா ஜோலி, லூசியா இவான்ஸ் உள்ளிட்ட சுமார் 70 பெண்களிடம் பாலியல் ரீதியாக ஹார்வே தவறாக நடந்து கொண்டார் என அவர் மீது வெளிப்படையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
#MeToo movement என்ற ஹேஷ்டேக் உடன் மேலும் பலர் தாங்களும் இவரது வலையில் வீழ்ந்த தகவல்களை பரிமாறி வருகின்றனர்.
ஆனால், தன்மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்துவரும் ஹார்வே, எதிர்பாலினத்தவர்களின் சம்மதத்துடன் அவர்களுடன் உறவு வைத்துகொண்டதாகவும், நான் யாரையும் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நியூயார்க் நகரில் உள்ள மன் ஹாட்டன் போலீசார் முன் ஹார்வே வெயின்ஸ்டீன் இன்று சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார், விலங்கு மாட்டி மன்ஹாட்டன் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர்.
அவரை 10 லட்சம் டாலர் ஜாமின் தொகையில் விடுவிக்க வழக்கறிஞர்கள் முயற்சித்து வருகின்றனர். ஹார்வே வெயின்ஸ்டீன் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லும் வகையில் அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்யவும், அவர் செல்லும் இடத்தை கண்காணிக்கும் கருவியை பொருத்தி நிபந்தனை ஜாமினில் விடுவிக்கவும் போலீசார் சம்மதிக்கலாம் என கருதப்படுகிறது.