அர்ஜுன மகேந்திரன் சிங்கப்பூரில் உள்ளார்: இலங்­கைக்கு அழைத்­து­வர நடவடிக்கை!!

மத்­திய வங்கி பிணைமுறி விவ­கா­ரத்தில் பிர­தான சந்­தேக நப­ராக கருதி கைது செய்­யப்­ப­டு­வ­தற்கு தேடப்­படும் மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்­திரன் சிங்­கப்பூ­ரி­லேயே உள்­ள­தாக சிங்­கப்பூர் பொலி ஸார் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

இது தொடர்பில் சிங்­கப்பூர் பொலிஸார் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­துள்­ள­தாக சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தின் மேல­திக சொலி­சிட்டர் ஜெனரல் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி யசந்த கோதா­கொட நேற்று கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்­ன­வுக்கு அறி­வித்தார்.

இந் நிலையில் அர்ஜுன் மகேந்­திரன் சிங்கப் பூரில் இருந்தால், சர்­வ­தேச பொலி­ஸாரின் சிவப்பு அறி­வித்தல் பிர­காரம் செயற்­படக் கோரி குற்றப் புல­னாய்வுப் பிரிவு சிங்கப் பூர் பொலி­ஸா­ருக்கு மின்­னஞ்சல் அனுப்­பி­யுள்­ள­தா­கவும் அவர் இதன்­போது சுட்­டிக்­காட்­டினார்.

இந் நிலையில் சிவப்பு அறி­வித்தல் பிர­காரம் அர்ஜுன் மகேந்­திரன் கைது செய்­யப்­பட்டால் அவரை இலங்­கைக்கு அழைத்­து­வர உள்­ளக மட்­டத்தில் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட தெரிவித்தார்.