யுத்தத்தில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு கடற்தொழிலாளர்களுக்கு வாழ்வாதார பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் அவர்களது பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது
முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்கு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் வருகை தந்ததை அறிந்த 452 ஆவது நாளாக கேப்பாபுலவு நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் அமைச்சரிடம் தமது காணி விடுவிப்பு தொடர்பில் கலந்துரையாட வருகைதந்திருந்தனர்
நிகழ்வு முடிந்து வருகைதந்த பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா சிவசக்தி ஆனந்தன் வடமாகாண விவசாய அமைச்சர் க சிவநேசன் வடமாகாண சபை உறுப்பினர் து ரவிகரன், புவனேஸ்வரன் மற்றும் மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோரை வெளியேறவிடாது தடுத்து நிறுத்தினர்
இதனை தொடர்ந்து நிகழ்வு முடிந்து வெளியேறிய அமைச்சரையும் கேப்பாபுலவு காணி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொதுமக்கள் கரைதுரைப்பற்று நுழைவாசலில் நின்று வழிமறித்தனர்.
இதன்போது, தங்களது காணிகளை இராணுவத்தினரிடம் இருந்து மீட்பது தொடர்பில் முன்னேற்றம் கிடைக்கவில்லை என கேப்பாபுலவு மக்கள் கவலை தெரிவித்தனர்
தொடர்ச்சியாக மக்களது கோரிக்கைகளுக்கு பதிலளிக்க வேண்டிய மீள்குடியேற்ற அமைச்சர் உங்களுடைய மந்திரியை கேக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்களை காட்டினார்.
தொடர்ந்து மகளது கருத்துக்களை கேட்ட அவர் மக்களிக்கு சரியான பதில் வழங்க முடியாத நிலையில் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களது உதவியுடன் மக்களிடம் பேசாமல் தப்பி சென்றார்.
அத்துடன் ஊடகவியலாளர்களையும் ஒளிப்பதிவு செய்யவேண்டாம் எனவும் அமைச்சர் பணித்திருந்தார்.
கடந்த உள்ளூராட்சி தேர்தல் பிரச்சார காலத்தில் முள்ளியவளை பொன்னகர் பகுதியில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் தமது கட்சி வாக்கு வங்கியை அதிகரிப்பதற்காக காணி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஒருவர், மக்கள் முன் காணியில் ஒருபகுதி விடுவிக்கப்பட்டதற்க்காக நன்றி தெரிவிக்கவில்லை என்பதற்காக இன்று அவரை பேச வேண்டாம் என்றும் அவரை வெளியேறுமாறும் பணித்தார். இந்த விடயமானது மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.