யாழில் பிள்ளை இல்லாத பெண் எடுத்த தவறான முடிவு!!

குடும்­பப் பெண் தவ­றான முடிவு எடுத்து உயி­ரி­ழந்­தார். தமக்­குப் பிள்ளை இல்­லையே என்ற மன உளைச்­ச­லால் அவ்­வாறு முடிவு எடுத்­தார் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

ஆனைக்­கோட்டை சாவற்­கட்­டைச் சேர்ந்த க.விஜயா (வயது – 35) என்­ப­வரே உயி­ரி­ழந்­தார்.

கடந்த 21 ஆம் திகதி அவர் வீட்­டுக் குளி­ய­ல­றை­யில் மண்­ணெண்­ணெய் ஊற்றி தீ மூட்­டி­யுள்­ளார்.

எரி தாங்க முடி­யாது அங்­கி­ருந்து வீட்­டுக்­குள் ஓடிச் செல்ல அவ­ரது தாயார் தீயை அணைத்து உட­ன­டி­யா­கவே யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்­தார்.

எனி­னும் சிகிச்சை பய­ன­ளிக்­காது அவர் நேற்று உயி­ரி­ழந்­தார்.

தமக்­குப் பிள்ளை இல்­லையே என்று அவர் கடு­மை­யாக மன உளைச்­ச­லுக்கு ஆளா­கி­யி­ருந்­தார். இந்­தி­யா­வுக்­குச் சென்று தீர்வு பெற­லாம் என்று அவ­ரது கண­வன் கூறி­யி­ருந்த நிலை­யில் இப்­படி நடந்­துள்­ளது.

திடீர் இறப்பு விசா­ரணை அதி­காரி ந.பிறே­ம­கு­மார் விசா­ரணை நடத்­தி­னார். சட­லம் உற­வி­னர்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.