இந்தியாவில் பெரம்பலூர் மாவட்டத்தில் 2017 – 2018 ஆம் நிதியாண்டில் வருவாய்த் துறை மூலம் 57,303 பயனாளிகளுக்கு 64 கோடி ரூபா மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த 57,303 பயனாளிகளில் இலங்கைத் தமிழர்கள் 238 பேரும் உள்ளடங்குகின்றனர்.
இதன்படி, இலங்கைத் தமிழர் விதவை உதவித்தொகை 13 பேருக்கும், இலங்கை தமிழர் முதியோர் உதவித்தொகை 20 பேருக்கும், இலங்கை தமிழர் மாற்றுத்திறனாளி உதவித்தொகை 2 பேருக்கும் முதிர்கன்னி உதவித்தொகை 203 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பல்வேறு திட்டங்களின் கீழ் மொத்தம் 57,303 பயனாளிகளுக்கு 64,39,73,510 ரூபா மதிப்பிலான நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் வே. சாந்தா தெரிவித்துள்ளார்.