தூத்துக்குடி சம்பவம் தொடர்பில் எரிக் சொல்ஹெய்ம்

எதிர்ப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வெடி பொருட்களையோ ஆயுதங்களையோ பயன்படுத்துவது தவறு என ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் நிர்வாக இயக்குநர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கொச்சின் விமான நிலையத்திற்கு நேற்று விஜயம் செய்த எரிக் சொல்ஹெய்ம் தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக கருத்து வெளிடும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

தூத்துக்குடி சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலில் எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்வாறு நடந்திருக்கக் கூடாது.

வன்முறையற்ற ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அதே சந்தர்ப்பத்தில் எதிர்ப்பு நடவடிக்கையை கட்டுப்படுத்த ஆயுதங்களையோ, வெடிபொருட்களையோ பொலிஸார் பயன்படுத்துவது பிழையான விடயம். இவ்விடயத்திற்கு உரிய தீர்வு கிடைக்குமென நம்புகின்றோம் என தெரிவித்துள்ளார்.