மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்திய சென்னை அணி, ரூ.20 கோடி பரிசுத்தொகையுடன் கோப்பையை வென்றது.
மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.
மும்பை: 11-வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் விளையாடி வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி, பந்துவீச்சு தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. வில்லியம்சன் 47 ரன்களும், யூசுப் பதான் 45 ரன்களும் எடுத்தது. இதன்மூலம் சென்னை அணிக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத்.
இதையடுத்து சென்னை அணி பேட்டிங் செய்தது. வாட்சன், டுபிளெசிஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
ஆட்டத்தின் 4 வது ஓவரில் டுபிளசிஸ் அவுட்டானார். 8 ஓவர்கள் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்துள்ளது. வாட்சன் 28 ரன்களுடனும், ரெய்னா 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
11-வது ஓவரை ஷகிப் அல் ஹசன் வீசினார். முதல் பந்தில் சிக்சர் அடித்த வாட்சன் தனது அரை சதத்தை பதிவுசெய்தார்.
இந்த ஓவரில் சென்னை அணிக்கு 2 சிக்சர் உள்பட 15 ரன்கள் கிடைத்தது.
12வது ஓவரை பிராத்வைட் வீசினார். இந்த ஓவரின் 3வது பந்தில் சென்னை அணி 100 ரன்களை கடந்தது. 13வது ஓவரில் சென்னை ஒரு விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது.
14-வது ஓவரை பிராத்வைட் வீசினார். மூன்றாவது பந்தில் சுரேஷ் ரெய்னா அவுட்டானார். இவர் 24 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்தார். அவரை தொடர்ந்து அம்பதி ராயுடு களமிறங்கினார். அப்போது சென்னை அணி வெற்றி பெற 5 ஓவர்களில் 33 ரன்கள் தேவைப்பட்டது.
இறுதியில், சென்னை அணி 18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வாட்சன் 117 ரன்களுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். இதையடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.