கிளிநொச்சி 155ம் கட்டைப்பகுதியில் வைத்து 1.600 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் இன்று பிற்ப்பகல் கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக விசேடச அதிரடிப்படைப்பிரிவின் கிளிநொச்சிப் பொறுப்பதிகாரி விஜயரத்ன தலைமயிலான குழுவினர் குறித்த பகுதியை சுற்றிவளைப்பு செய்த பொழுதே சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் 1.600 கிலோகிராம் கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் கிளிநொச்சியில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுபட்டுவரும் நபர் என அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்
மேலும் சான்ருப்போருட்களும் சந்தேகநபரும் நாளை கிளிநொச்சிப் பொலிசார் ஊடாக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆயர்ப்படுத்த இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்