பிரபாகரன் மக்களுக்கு செய்த நன்மை!

பிரபாகரன் மக்களுக்கு செய்த நன்மையை அழித்துவிட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது குழந்தை போல் பேசி வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கு மாகாணத்திற்கு 2 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கிளிநொச்சி மாவட்ட மீளாய்வுக் கூட்டத்தில் நேற்று கலந்துகொண்டார்.

இந்த கூட்டத்தில், கிளிநொச்சி பிரதேசமானது முதலில் அபிவிருத்தி செய்யப்பட்டுவருகின்ற நிலையில் அங்கு நீர் பிரச்சினையே முதலில் தீர்க்கப்படவேண்டி இருப்பதாக பிரதமர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த யுத்த காலத்தில் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் கிளிநொச்சி இருந்த போது நோர்வே அரசாங்கத்தின் நிதியில் பாரிய நீர்தாங்கி ஒன்று அமைக்கப்பட்டு அதன் காரணமாக வடக்கு மாகாணத்தில் பல பிரதேசங்களில் இருந்த நீர் பிரச்சினையை தீர்க்க முடிந்தது.

இந்த நீர்த்தாங்கியை அன்று பிரதமராக இருந்த போது ரணில் விக்ரமசிங்க அழித்துவிட்டு தற்போது மக்களின் பிரச்சினை தொடர்பில் குழந்தை நாடகமிடுவதாக, சிங்கள ஊடகதில் வெளியாகியுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதமரின் கிளிநொச்சி விஜயத்தின் பின்னர் அங்கு அவரிடமும், மீள்குடியேற்ற அமைச்சிற்கும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் மக்களின் மனுக்கள் வீசப்பட்ட நிலையில் இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.