-
மேஷம்
மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்ப தால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் திறமையை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் பனிப்போர் வந்து நீங்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படு வார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உதவுவார்கள். நன்மை கிட்டும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர் கள். அரசால் அனுகூலம் உண்டு. உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
-
கடகம்
கடகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிக்கனமாக செல வழித்து சேமிக்கத் தொடங் குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
-
சிம்மம்
சிம்மம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். புது வேலை அமையும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.
-
கன்னி
கன்னி: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். சொந்த-பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோ கத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். சிறப்பான நாள்.
-
துலாம்
துலாம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப் படுவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.
-
தனுசு
தனுசு: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். செல வுகள் கட்டுக்கடங்காமல் போகும். உறவினர்களுடன் பிணக்குகள் வரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.
-
மகரம்
மகரம்: குடும்பத்தி னருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். இனிமையான நாள்.
-
கும்பம்
கும்பம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். சகோதரங்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
-
மீனம்
மீனம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதித்துக் காட்டும் நாள்.