ஸ்ரீதேவி யாருக்கும் தெரியாமல் வைத்திருந்த பொக்கிஷத்தை வெளிகாட்டிய மகள்!

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழி படங்களிலும் ஈடு இணை இல்லாத நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தன்னுடைய திரையுலக வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டவர். பின் இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் ‘மூன்று முடிச்சி’ படத்தின் மூலம் ஹீரோயின் அவதாரம் எடுத்தார்.

முதல் படத்திலேயே பிரமாண்ட வெற்றியை கொடுத்த ஸ்ரீதேவிக்கு தொடர்ந்து, பல படங்களில் நடிக்க வாய்புகள் குவிந்தது. தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வளந்தார். தமிழை தொடர்ந்து மற்ற மொழி படங்களிலும் கவனம் செலுத்த தொடங்கிய ஸ்ரீதேவி பாலிவுட் திரையுலகிற்கு சென்று லேடி சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை பிடித்தார்.

தனக்கென மிகபெரிய ரசிகர்கூட்டதை வைத்திருந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, துபாயில் மரணமடைந்தார்.

இந்நிலையில் இவரை பற்றிய நினைவுகளை அவ்வப்போது, இவருடைய மகள் ஜான்வி ரசிகர்களிடம் பகிர்ந்துக் கொண்டு வருகிறார்.

ஒருமுறை அவர் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றப்போது அவரின் மொபைல் வால்பேப்பர், போட்டோகிராபர்களின் கேமராவில் சிக்கியது. தன் சிறு வயதில் ஸ்ரீதேவியுடன் எடுத்த ஒரு புகைப்படத்தை தான் அவர் வால்பேப்பராக வைத்திருந்தார்.

தற்போது ஜான்வி சமூக வலைத்தளத்தில் இதுவரை யாருமே பார்த்திராத ஸ்ரீதேவி அவருடைய கையால் வரைந்து மிகவும் பொக்கிஷமாக பாதுகாத்து வைக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் இதோ..