பிரபல நடிகை குட்டி ராதிகா, ஷாருக்கான் நடித்த ‘ரா வன்’ படத்தில் இடம்பெற்ற ‘சம்மக் சல்லோ’ பாடலுக்கு பெல்லி நடனம் ஆடிய காணொளியொன்றை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்தார்.
கடந்த வருடம் அவர் இந்த காணொளியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார்.
எவ்வாறாயினும், இந்த காணொளி தற்போது வைரலாக பரவி வருகிறது.
அது, இவர் கடந்த தினத்தில் கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதிவியேற்ற குமாரசாமியின் மனைவியென்பதால் ஆகும்.
இதன் காரணமாக இவரை இணைத்தில் தேடும் ரசிகர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு குட்டி ராதிகாவை ரகசியமாக குமாரசாமி திருமணம் செய்துக்கொண்டார்.
இந்நிலையில் , கடந்த 2010ம் ஆண்டு அவர்களுக்கு குழந்தை பிறந்ததை தொடர்ந்து குட்டி ராதிகாவை தான் இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டதை ஒப்புக்கொண்டார்.
இவர் முதலமைச்சரின் மனைவியாக இருந்த போதிலும் , நடிப்பின் மீது கொண்டுள்ள ஆர்வத்தால் தொடர்ந்து சிறந்த படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.