தேவையான பொருட்கள
கோதுமை மாவு – 1கப்
மைதா – 1கப்
எண்ணெய் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
வெங்காயம் – 3 கப்
அவல் – 3 கப்
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி – 1/2 கப்
எலுமிச்சை சாறு – 1/2 தேக்கரண்டி
மைதா,கோதுமை,உப்பு,எண்ணெனை சேர்த்து தண்ணீர் விட்டு சாப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.
15நிமிடம் உறவிடவும்.
ஒரு பாத்திரத்தில் வெங்காயம்,அவல்,மிளகாய் தூள்,சீரக பொடி,நறுக்கிய பச்சை மிளகாய்,உப்பு,கொத்தமல்லி,எலுமிச்சை சாறு சேர்த்து பிசரி கொள்ளவும்.
சமோசா மாவை சாப்பாதி போல் மெல்லியதாக திரட்டி கொள்ளவும்.
தோசை கல்லில் போட்டு ஒரு பக்கம் மட்டும் சுடுபடுத்தினால் போதுமானது.
மைதாவில் சிறிது தண்ணீர்விட்டு பசைபோல் செய்து கொள்ளவும்.
சுடுபடுத்தின சப்பாதியை நிலவாக்கில் வெட்டவும்.
பசையை தடவி முக்கோணமாக மடித்து கொண்டு செய்து வைத்திருந்த
வெங்காய கலவையை நிரப்பி பசையை தடவி முடிவிடவும்.
சுடாண எண்ணெயில் செய்து வைத்த சமோசாவை பொறித்து எடுத்தால்
சுவையான வெங்காய சமோசா ரெடி.