துளசிக்கு ஈடு இணை எந்த மருந்தும் இல்லை என்பது பலரும் அறிந்த ஒன்று. சளி, இருமல் போன்றவற்றிற்கு துளசி நல்ல இயற்கை மருந்தாக பயன்படுகிறது.
குழந்தைகளுக்கு இதனை மூன்று வேளை கொடுத்தால், சளி, இருமல் போன்றவை கிட்டவே நெருங்காது.
- துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக்கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் போன்ற பிற தொண்டை நோய்களை குணமாக்கும் சக்தி உண்டு.
- மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களை கட்டுப்படுத்த சூடான பாலில் துளசியை சேர்த்து குடித்து வந்தால் போதும்.
- பதற்றம் ஏற்படுவதை தவிர்த்து நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
- உடல் எடை குறைய துளசி இலைச்சாறுடன் எலுமிச்சம் பழம் சேர்த்து சூடாக்கி அதனுடன் தேன் கலந்து உணவுக்குப் பிறகு குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
- சிறுநீரகத்தில் கற்கள் உண்டாவதையும், அதனை கரைக்கவும் துளசி உதவுகிறது. மேலும், பால் கலந்த பானத்தில் உள்ள சிறந்த டையூரிடிக், யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்கிறது.
- துளசி இலை போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து குடித்து வந்தால், வாய் துர்நாற்றத்தை போக்கும்.
- ஒரு டம்பளர் பாலில் துளசி சேர்த்து குடித்து வந்தால், அதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் உடலிலுள்ள வெப்பத்தை குறைத்து காய்ச்சலை குணப்படுத்துகிறது.
- துளசியிலுள்ள ஊட்டச்சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும், புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கிறது.