திருச்சி மாவட்டத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் காட்டுக்குள் கிடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தச்சமலை காட்டுப்பகுதி வழியாக நடந்து சென்றவர்கள், 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் இருப்பதை பார்த்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து வந்த பொலிசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டனர். அந்த பெண்ணின் சடலம் ஆடைகள் களைந்த நிலையிலும், முகத்தில் கல்லைப்போட்டு சிதைக்கப்பட்ட நிலையில் இருந்தது.
முதற்கட்ட விசாரணையில் அப்பெண் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்த 1 கிலோ மீற்றர் தொலைவில் ஆண் நபரின் காலணி ஒன்று கிடந்துள்ளதை மோப்ப நாய் கண்டுபிடித்துள்ளது.
இந்த காலணிக்கும், இப்பெண்ணை கொலை செய்த நபருக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அடிப்படையில் பொலிசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.