கொழும்பில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நல்லிணக்கம்!

கொழும்பில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடு ஒன்று நடைபெற்றுள்ளது.

மருதானை பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்று அனைத்து ஊடகங்களின் கவனத்தையும் ஈர்ந்துள்ளது.

மருதானையில் இளைஞர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட தன்சல் தான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த தன்சல் தான நிகழ்வு இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.

நோன்பு நோற்கும் இஸ்லாமிய பக்தர்களை இலக்கு வைத்து இந்த தன்சல் நடத்தப்பட்டுள்ளது.

நோன்பினை கடைப்பிடிக்கும் இஸ்லாமிய பக்தர்கள், தங்கள் நோன்பு துறக்கும் கடமையை தன்சலில் நிறைவு செய்தனர்.

தன்சல் தான நிகழ்வில் பெருமளவு இஸ்லாமிய பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்த நல்லிணக்க சம்பவம் பலரையும் நெகிழ்ச்சி ஆழ்த்தியுள்ளது.

இனங்களுக்கு இடையில் முரண்பாடுகள் நிலவினாலும், இவ்வாறான செயற்பாடுகள் மன நிறைவினை தருவதாக தான நிகழ்வில் பங்கேற்ற பலரும் தெரிவித்துள்ளனர்.