ஹாங்காங்கில் நகைக்கடையில் புகுந்து இரண்டு திருடர்கள் வைரங்கள் மற்றும் நகைகளை திருடிச் சென்றது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
ஹாங்காங்கில் உள்ள ஷாப்பிங் மாலில் கடந்த புதன் கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 07.15 மணியளவில் அங்கிருக்கும் Prince Jewellery ஷாப்பில் புகுந்த முகமூடி அணிந்த இரண்டு கொள்ளையர்கள், அங்கிருக்கும் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை கூர்மையான ஆயுதம் வைத்து மிரட்டி அங்கிருக்கும் நகைகள் மற்றும் வைரங்களை திருடிச் சென்றுள்ளனர்
இது குறித்து அங்கிருக்கும் ஊள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கையில், முகமூடி அணிந்து வந்த இரண்டு கொள்ளையர்கள், அங்கிருக்கும் கண்ண்டாடியை உடைத்து உள்ளே இருக்கும் நகைகள் மற்றும் வைரங்களை திருடிச் சென்றுள்ளனர்.
அங்கிருக்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் சத்தம் போட்டு விடக் கூடாது என்பதற்காக கூர்மையான ஆயுதங்களை வைத்து மிரட்டியுள்ளனர்
அந்த இரண்டு பேரில் ஒருவன் ஆயுதத்தை வைத்து மிரட்டியும், மற்றொரு நபர் அங்கிருக்கும் பொருட்களை கொள்ளையடித்துள்ளான்.
இரண்டு வைர மோதிரங்கள், இரண்டு வைர நெக்லஸ்கள், ஒரு வைர கைச்சங்கிலி மற்றும் சில நகைகள் திருடிச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன் மதிப்பு 478,000 பவுண்ட்(இலங்கை மதிப்பு 10,07,87,364 ரூபாய்) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அறிந்த பொலிசார் உடனடியாக அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு, இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கும் படி கூறியுள்ளனர்