மனைவி, பச்சிளம் குழந்தை உட்பட குடும்பத்தினரை கொடூரமாக வெட்டிவிட்டு தற்கொலை செய்து கொண்ட தந்தை!!

பிங்கிரிய பொலிஸ் பிரிவின் இஹல கடிகமுவ பிரதேசத்தில் ஒருவர் தனது மனைவி, மாமியார், மாமனார் மற்றும் தனது மகனான ஆண் குழந்தை ஆகியோரை கத்தியால் குத்தி படுகாயத்தை ஏற்படுத்தி, விட்டு வீட்டுக்கு முன்பாக தற்கொலை செயதுக்கொண்டுள்ளார்.சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் படுகாயமடைந்த 6 மாத ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது.

24 வயதான மனைவி, 42 வயதான மாமியார் மற்றும் 62 வயதான மாமனார் ஆகியோர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்தக் குற்றத்தை செய்த நபர் வீட்டில் இருந்து வெளியேறி மூன்று மாதங்களுக்கு மேலாக வெளியில் வசித்து வந்துள்ளார். மீண்டும் வீடு திரும்பிய நபர் இந்த செயலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை செய்துக்கொண்ட கொலையாளியின் முகம் மற்றும் தலைப்பகுதி என்பன அடையாளம் தெரியாதபடி கடுமையாக சேதமடைந்துள்ளது. ஹக்க பட்டாசு போன்ற வெடிப்பொருளை பயன்படுத்தி, இந்த நபர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.கொலையாளியின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. பிங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.