கனடாவில் தானாக தோன்றிய சாய்பாபாவின் உருவம்! சிசிடிவி காட்சி

திரைக் கடலோடியும் திரவியம் தேடு என்பது நம் முன்னோர்களின் பழமொழி. அப்படி நம் நாட்டவர்கள் பிழைப்பிற்காக ஏழுகடல்களை தாண்டிச் சென்றாலும், சென்ற அந்நாடுகளிலும் நமது ஆன்மிகப் பண்பாட்டை கைவிடாமல், அதைப் போற்றி பாதுகாப்பது நம்மவர்களுக்கே உரிய தனிச் சிறப்பாகும். அப்படி கடல் கடந்து வாழும் நம் நாட்டவர்கள் அமைத்த ஒரு கோவிலில் நிகழ்ந்த ஒரு ஆன்மிக அதிசயம் தான் இது.

கனடா நாட்டில் வாழும் சிலர் இனைந்து சாய் பாபாவிற்கென ஒரு சிறிய கோவில் ஒன்றை அமைத்து, ஒவ்வொரு வியாழக்கிழமையும் சாய் பாபாவிற்கு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர்.

அப்படி ஒரு நாள் இரவு அக்கோவிலில் பணிகளை முடித்துக்கொண்டிருந்த பக்தர் ஒருவர் பூஜையறையோரம் இருக்கும் சுவற்றில் ஸ்ரீ பாபாவின் முகத்தோற்றம் தோன்றியதைக் கண்டு ஆனந்தம் அடைந்ததாகவும், உடனே அவ்வுருவத்தை புகைப்படம் எடுத்ததாகவும் கூறுகிறார். இதன் பிறகு சில நாட்கள் கழித்து மீண்டும் பாபாவின் உருவம் அச்சுவற்றில் தோன்றி இப்போது நிரந்தரமாகவே அச்சுவற்றில் இருப்பதாக கூறுகிறார்கள்.

இந்த அதிசய சம்பவத்தைக் கேள்விப்பட்டு கனடா நாட்டு ஊடகங்களும் இந்நிகழ்வைப் பற்றி செய்திகள் வெளியிட்டுள்ளன. மேலும் கனடா மற்றும் அமெரிக்காவில் வாழும் சாய் பாபாவின் பக்தர்களும் அதிகளவில் இக்கோவிலுக்கு வரத்தொடங்கியிருப்பதாக இக்கோவில் நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

மேலும் பல்லாயிரக்கணக்கான மைல்கள் கடந்து வாழ்ந்தாலும், தங்களுடன் எப்போதும் ஸ்ரீ சாய் பாபா இருப்பதை இந்நிகழ்வு உணர்த்துவதாக அவரின் பக்தர்கள் மகிழ்கின்றனர்.